இலுப்பூர் அருகே கிராவல் மணல் கடத்திய லாரி பறிமுதல்

இலுப்பூர் அருகே கிராவல் மணல் கடத்திய லாரி பறிமுதல்
X
குற்றச்செய்திகள்
இலுப்பூர் அருகே மேட்டுகாட்டுப்பட்டி பகுதியில் கிராவல் மணல் கடத்தப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிராவல் மணல் கடத்திய லாரி மற்றும் பொக்லின் இயந்திரத்தை பறிமுதல் செய்த இலுப்பூர் போலீசார் பெரியகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர் (45), மேட்டுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story