புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில்

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2024 -2025- ம் ஆண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். விழாவில், திட்டச்சேரி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் அப்துல் ரஷீது கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, இப்பள்ளியில் 2022 - 2023-ம் ஆண்டு படித்த மாணவி ரஸ்மினா தஸ்னீம் என்ற மாணவிக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையும் தமிழக அரசின் பள்ளி கல்வி துறையால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், உறுப்பினர்கள், ஜமாத்தார்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story