மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய முக்கிய குற்றவாளி கைது.

X

மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய முக்கிய குற்றவாளி கைது.
மேல்மருவத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடிய முக்கிய குற்றவாளி கைது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கொள்ளையர்கள் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பணம் மற்றும் நகைகளை திருடிச் செல்லும் குற்றவாளிகளை பிடிக்க செங்கல்பட்டு எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின் பெயரில், மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு குற்றம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சம்பவம் நடந்த வீடுகளில் ஆய்வு செய்தும் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள சித்ரா லட்சுமணன் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து நகை பணம் திருடி சென்ற தஞ்சாவூர் மாவட்டம் பணக்கரை புதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (46) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் திருடிய நகைகளை கும்பகோணம் மற்றும் அவிநாசி பகுதியில் உள்ள நகை கடைகளில் அடகு வைக்கப்பட்டதை பறிமுதல் செய்து மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு உள்ள மாவட்ட சிறையில் சிறையில் அடைத்தனர்.
Next Story