அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி

X

அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,அனந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024- 25 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 25000, ரூபாய்15,000, ரூபாய் 10,000 யும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூபாய் 10,000, ரூபாய் 7000 ரூபாய் 5000 யும் அனந்தமங்கலம் கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீ அகவன் அறக்கட்டளையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது... அப்போது மாணவர்களுக்கும் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது..இதில் ஸ்ரீ அகவன் அறக்கட்டளை நிர்வாகிகள்,ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story