வளர்ச்சி திட்ட பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்

மதுரை அருகே வளர்ச்சி திட்ட பணிகளை இன்று அமைச்சர் துவக்கி வைத்தார்
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9 பணிகளும், கிராம ஊராட்சி பொதுநிதி திட்டத்தின் கீழ் 12 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ் 4 பணிகளும் மொத்தம் ரூ.726.69 லட்சம் மதிப்பீட்டில் , 25 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை ஒவ்வொரு இடமாக நேரில் ஆய்வு மேற்கொண்டு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story