காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு

X

குமாரபாளையத்தில் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
குமாரபாளையம் காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். நேற்று சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில், காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காவிரி ஆற்றில் பால், மஞ்சள் நீர், குங்குமம், உள்பட பல திரவியங்கள் ஊற்றி, தீபாராதனை காட்டப்பட்டது. அனைவரும் மலர்கள் தூவி, காவிரி தாயே வாழ்க, என பக்தி கோஷமிட்டனர். வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இப்பகுதியில் இயங்கி வரும் பல்வேறு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் நதி நீரில் கலக்கும் நிறுவனங்கள் மீதுமாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நதிநீரை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என வேண்டிகொண்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சபரிநாதன், சீனிவாசன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
Next Story