தெரியாத மின்விளக்குகளை சீரமைத்த திமுக நிர்வாகி.

X

மதுரை உசிலம்பட்டி அருகே எரியாத மின்விளக்குகளை சீரமைத்த திமுக நிர்வாகிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லூத்து கிராம மக்கள் மின்விளக்கு இல்லாமல் இரவு நேரங்களில் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து கிராம மக்கள் மின்வாரியத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உசிலம்பட்டியை சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளம் மகிழனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர் மின் வாரியத்தின் அனுமதி பெற்று கல்லூத்து கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள மின்கம்பங்களில் தனது சொந்த செலவில் மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கிராமம் வெளிச்சம் அடைந்ததால் கிராம மக்கள் திமுக பிரமுகர் இளம்மகிழனுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story