பெயிண்ட் அடிக்கும் கூலி தொழிலாளி காலில் அடிபட்டு கவனிக்காமல் விட்டதால் இறப்பு

X

குமாரபாளையம் அருகே பெயிண்ட் அடிக்கும் கூலி தொழிலாளி காலில் அடிபட்டு கவனிக்காமல் விட்டதால் இறந்தார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல், 55. பெயிண்ட் அடிக்கும் கூலி தொழிலாளி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெயிண்ட் அடிக்கும் வேலை செய்த போது, காலில் அடிபட்டு, புண் ஆகிவிட்டது. இதை அவர் பொருட்படுத்தாமல் சிகிச்சை செய்யாமல் விட்டு விட்டார். இதனால், புண் பெரிதாகி அவதிப்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில், சிறுநீர் வரவில்லை என்று சொன்னதால், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இவரது உடல்நிலை மோசமாக உள்ளது என்று கூறியதால், பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து இவரது மனைவி பழனியம்மாள், 50, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story