மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர்

மதுரை அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற மகளிர்_சுய_உதவிக்குழு_தின விழாவின் தொடர்ச்சியாக, மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா இன்று ( ஜூன்.11) நடைபெற்றது. மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் உள்ள யாதவா மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1113 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.66.63 கோடி - நகர்ப்புர பகுதியில் உள்ள 588 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.62 கோடி மற்றும் வாழ்ந்து கட்டுவோம் திட்டம் மூலம் 15 குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு ரூ.36.53 லட்சம் என மொத்தம் ரூ.129 கோடி கடன் இணைப்புகளை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்.. உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, எம்எல்ஏக்கள், மேயர், துணை மேயர்,திமுக நிர்வாகிகள் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுவினர்
Next Story