பள்ளப்பட்டி - நகராட்சி நிர்வாகத்தை அலைபேசியில் வறுத்தெடுத்த கவுன்சிலர்.வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.

பள்ளப்பட்டி - நகராட்சி நிர்வாகத்தை அலைபேசியில் வறுத்தெடுத்த கவுன்சிலர்.வலைதளத்தில் வைரலாகும் வீடியோ.
.பள்ளப்பட்டி - நகராட்சி நிர்வாகத்தை அலைபேசியில் வறுத்தெடுத்த கவுன்சிலர்.வலைதளத்தில் வைரலாகும் வீடியோ. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 10-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த வஹிதா பானு பொறுப்பில் உள்ளார். இவர் வார்டுக்கு உட்பட்ட சொட்டல் தெருவில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் செல்லக்கூடிய குடிநீர் பைப் லைன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சரி செய்து கொடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளிடம் கவுன்சிலர் வகிதா பானு பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் ஒருவரே குடிநீர் பைப் லைன் பழுதை சரி செய்து கொடுக்கும்படி தெரிவித்தும், பல நாட்களாக வேலை செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால், ஆத்திரமடைந்த கவுன்சிலர் வகிதா பானு சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக வந்து, உடைந்த பைப் லைன் மீது டேப் போட்டு ஒட்டப்பட்டுள்ளதால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு போன் செய்து வறுத்து எடுத்தார். மேலும், பள்ளப்பட்டி நகராட்சி நிர்வாகத்தின் மீது துறை ரீதியாக புகார் கொடுக்க உள்ளதாக கடிந்து கொண்டார். தற்போது இந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story