அரசின் கடல் அழிவுத் திட்டங்களை எதிர்த்து போராட்டம்

X

சின்னத்துறை
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கப்பல்களால் ஏற்படும் ஆபத்தான விபத்துகள் போன்றவற்றால் கடலையும் கடற்கரையையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க சின்னமுட்டம் துறைமுகத்தில் கடலில் இறங்கி கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு சின்னமுட்டம் பங்குப்பேரவை துணைத்தலைவர் கமலஸ் தலைமையேற்றார். இபபோராட்டத்தை வாழ்த்தி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிஇயக்குநர் டங்ஸ்டன், சுற்னுச்சூழல் காப்பாளர் குழு ஒருங்கிணைப்பாளர் குறும்பனை பெர்லின் ஆகியோர் பேசினர். அவர்கள் உரையில் குமரி தெற்குக்கடல்பகுதியில் பகுதியில் 27155 ச.கி.மீ.பகுதியில் இயற்கை எரிவாயு எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரை கடலில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தையும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் 1144 ஹெக்டேர் நிலங்களில் அணுக்கனிமச் சுரங்க திட்டத்தையும் உடனே கைவிட வேண்டும் என்றும் கப்பல் விபத்தால் ஒரு தலைமுறையையே பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களுக்கு ஆளுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Next Story