ஆற்றின் கரையில் மண் நிரப்பும் பணி தீவிரம்

ஆற்றின் கரையில்  மண் நிரப்பும் பணி தீவிரம்
X
நித்திரவிளை
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே குழித்துறை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தின் போது ஆறு திசை மாறி, கணியன்குழி பகுதியில் உள்ள கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைவான காலங்களில் கடல் நீர் உட்புவது தொடர்ந்து வருகிறது. இதனால் குடிநீர் கிணறுகள் உப்பாக மாறுகிறது. இதை எடுத்து அந்தப் பகுதியில் காவல் மண் போட்டு நிரப்பப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது அரசு 2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் படி கிராவல் மண் எடுத்து வந்து கணியங்குழி பகுதியில் ஆற்றின் கரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தினமும் சுமார் 21 டாரஸ் லாரி மண் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
Next Story