மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

X

மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீசார் அங்குள்ள அரசு ஆண்கள் மேல் பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றார். ஆனால் போலீசார் சுதாரித்து உடனடியாக அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் உண்ணாமலை கடை பகுதியை சேர்ந்த விஷ்ணு (21) என்பதும் அவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. விஷ்ணுவை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதற்கு இடையில் விஷ்ணு ஓட்டிய அந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story