ஜல்லிகள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

X

கொளத்துார் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. சோமங்கலம், அமரம்பேடு, கொளத்துார், மேட்டு கொளத்துார், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதியினர், கொளத்துார் பிரதான சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையில், இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது. இதையடுத்து, கடந்த மாதம் சேதமான இடங்களில், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. இந்த நிலையில், சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் சிதறியுள்ளதால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஜல்லியில் இடறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழலில் சென்று வருகின்றனர். மேலும், பெண்கள், வயதானோர் செல்லும் போது, தடுமாற்றம் அடைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கொளத்துார் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story