சங்கரமடத்தில் மகா சுவாமிகள் உருவ பைபர் சிலை புதுப்பிப்பு

X
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மஹா சுவாமிகள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தின், சுற்றுபிரகார வளாகத்தில் பைபரால் செய்யப்பட்ட மஹா சுவாமிகளின் திருஉருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, 32 ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவைச் சேர்ந்த ஹரி என்ற பக்தர் சங்கர மடத்திற்கு வழங்கினார். பைபரால் செய்யப்பட்ட மஹா சுவாமிகளின் திருஉருவசிலை நேற்று பழமை மாறால் புதுப்பிக்கப்பட்டது. கொல்கட்டாவில் உள்ள சிற்பியரை, காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வரவழைத்து, பழமை மாறாமல் புதியதாக வர்ணம் தீட்டி புதுப்பித்து சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையானது அவரது உயர அளவுக்கே வடிவமைக்கப்பட்டிருப்பதே இதன் சிறப்பாகும். இச்சிலையை இருந்த இடத்திலேயே மீண்டும் நிர்மாணித்தபின் அதற்கான பூஜைகள் செய்யப்பட்டன.
Next Story

