கரூரைச் சேர்ந்த வாலிபர் மதுரையில் கொலையா? காவல்துறை சந்தேகம் .

கரூரைச் சேர்ந்த வாலிபர் மதுரையில் கொலையா? காவல்துறை சந்தேகம் .
கரூரைச் சேர்ந்த வாலிபர் மதுரையில் கொலையா? காவல்துறை சந்தேகம் . கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வாலிபர் கொலையானது குறித்து சந்தேகம் தெரிவித்து அறிவிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண், ஐந்தரை அடி உயரமும் , மா நிறமும் , நீள் வட்ட முகமும் ,சுருட்டை முடி , தாடியுடன் கூடிய அவரது உடலில் வலது தோள் பட்டையில் ஒரு மச்சமும் ,வலது கணுக்காலில் ஒரு காய தழும்பும் உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த நபர் மதுரை மாவட்டம் , ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது தொடர்பாக மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,கொலையானவரின் உடலை மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு இறந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தால் , உடன் மதுரை மாவட்டம் , ஒத்தக்கடை காவல் நிலைய தொலைபேசி எண் 94981 01440 என்றஎண்ணிலோ அல்லது ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன் அவர்களை தொடர்பு கொள்ள 86674 31386 என்ற எண்ணிலோ , உதவி காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து பாண்டி அவர்களை 82209 79043 எண்ணில் தொடர்பு கொண்டு கொலையான நபர் குறித்து தகவல்களை தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Next Story