வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

X

குமாரபாளையம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
குமாரபாளையத்திலிருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிறுத்தம் அருகே நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக வருகின்றனர். வழக்கம்போல் பொதுமக்கள் தங்கள் வாய்தா தேதி என்பதால், நீதிமன்றத்திற்கு நேற்று காலை 10:00 மணியளவில் வந்து விட்டனர். திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் மணி என்பவரை தாக்கிய, எதிரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்திட வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டி, திருச்செங்கோடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்களை கேட்டுக்கொண்டனர். ஆகவே, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பல ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
Next Story