திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை குறித்து பிஜேபி கட்சியினர் புகார் மனு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை குறித்து பிஜேபி கட்சியினர் புகார் மனு
X
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை குறித்து பிஜேபி கட்சியினர் புகார் மனு
திருப்பத்தூர் மாவட்ட ம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை குறித்து பிஜேபி கட்சியினர் புகார் மனு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் அரசு மருத்துவர்கள்* சரியான நேரத்தில் பணி செய்யாதது இதனால் பொதுமக்களும் புற நோயாளிகள் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம்
மனு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுகாதாரத்துறை இணை இணை இயக்குனரிடம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு மற்றும் பொதுமக்களும் புற நோயாளிகள், உள்நோயாளிகள், பாதிக்கப்படுகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் மேகநாதன் மனு வழங்கினார் அம்மனுவில் குறிப்பிட்டதாவது மாவட்டம் மருத்துவமனையாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணி செய்ய வரும் மருத்துவர்களில் பெரும்பாலான மருத்துவர்கள் குறித்த நேரத்தில் பணியில் இருப்பதில்லை மாறாக அவர்கள் சொந்தமாக நடத்தி வரும் மருத்துவமனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் , புறநோயாளிகள் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சேவையானது ஏனோ தானாகவும் மிக அலட்சியப்போக்கோடு செயல்படுகின்றனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது .ஒப்பந்த அடிப்படையில் பணிவு புரியும் அனைத்து தரப்பு பணியாளர்களும் அதிகார தோரணையில் வரும் நோயாளிகளை அலட்சியப்படுத்தியும் மனித உரிமை மீறுகின்ற செயல்களில் ஈடுபட்டு கையூட்டுகள் பெறும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். பின்பு பாதிப்புகள் வருங்காலத்தில் நிகழா வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உள்நோயாளிகளுக்கும், புற நோயாளிகளுக்கும் உதைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுசெயல்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story