நாமக்கல் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகி அறிவிப்பு

திமுக மேற்கு மாவட்ட செயலாளராக உமாசங்கர் நியமனம் ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக சுதாகர் செயல்பட்டு வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ,நாமக்கல் மேற்கு மாவட்ட புதிய செயலாளராக பள்ளிபாளையத்தை சேர்ந்த க.உமாசங்கர் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இவருக்கு கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1999 முதல் பள்ளிபாளையம் கிளைச் செயலாளர், நகர மாணவரணி துணைச் செயலாளர் ,நகர இளைஞரணி செயலாளர், மாவட்ட இளைஞரணி தலைவர், மாநில இளைஞரணி துணைத் தலைவர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் , பள்ளிபாளையம் நகர செயலாளர், தற்போது மாவட்ட அமைப்பு செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சி பணியாற்றிய நிலையில், அவருக்கு தற்போது மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story