மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி

மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான மணிமேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கியதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் மாவட்ட அளவிலான 10 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.172.04 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு வங்கி கடன் உதவிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இஆப. இன்று (11.06.2025) வழங்கினார்கள். உடன், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் அ.லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ்.மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் வங்கி) மேலாளர் ராமஜெயம், அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, உதவி மகளிர் திட்ட அலுவலர் சந்தோஷம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story