மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா

X

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு தின விழாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசுதனன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தவெ.ச.நாராயண சர்மா.இ.ஆ.ப., செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லோகநாயகி, முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயா கருணாகரன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story