இயற்கை மரணத்திற்கு பிறகு முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் வழங்கிய கணவன், மனைவி.

இயற்கை மரணத்திற்கு பிறகு முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் வழங்கிய கணவன், மனைவி.
X
உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான படிவத்தை பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் ஐயாவிடம் வழங்கினார்.
இயற்கை மரணத்திற்கு பிறகு முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் வழங்கிய கணவன், மனைவி. பெரம்பலூர் வட்டம் , பெரம்பலூர் துறையூர் சாலையில் அரணாரை சுவாமி தியேட்டர் அருகே திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா துலையாநந்தம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் மணிகண்டன், மணிகண்டன் மனைவி மரகதம் ஆகியோர் தங்கி ஹோட்டல் ஒன்றில் கூலிவேலை செய்து வருகின்றனர். மணிகண்டன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தமது இயற்கை மரணத்திற்கு பிறகு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி படிப்பிற்கு உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில் முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான படிவத்தை பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன் ஐயாவிடம் வழங்கினார்.இதேபோல கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப மணிகண்டன் மனைவி மரகதமும் முழு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து படிவம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் ,, செங்குணம் குமார் அய்யாவு உடனிருந்தனர்.
Next Story