சிவகாசியில் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.....

X

சிவகாசியில் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது.....
சிவகாசியில் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்த நீதிபதியின் செயல் பாராட்டை பெற்றுள்ளது..... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் விஜய பாரதி. சிவகாசி ஒருங்கிணைந்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்:2-ல் நீதிபதியாக உள்ள இவரது மனைவி கங்கா சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பணி மாறுதலாகி சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்ற விஜய பாரதி தனது 7 வயது மகள் அன்பிற்கினியாளை விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு கல்வி கற்க அதற்குரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் தனபாலிடம் வழங்கி சேர்த்துள்ளார். விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி கல்விகள் இரண்டும் உள்ள நிலையில், நீதிபதி விஜயபாரதி தமிழ் மொழியில் கல்வி கற்றால் மட்டுமே சிந்தனைத் திறன் வளருமென்ற அடிப்படையில், தனது மகள் அன்பிற்கினியாளை அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியிலேயே படிப்பைத் தொடர சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை கல்வி பயில சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள் மத்தியில், நீதிபதி பொறுப்பிலிருக்கும் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில், அதுவும் தமிழ்வழிக்கல்வி பயில மிகுந்த ஆர்வத்தோடு சேர்த்துள்ளது பிற பெற்றோர்களுக்கு முன் உதாரணமாக உள்ளதாகவும், இதன் மூலமாக அரசுப் பள்ளிகளில் மாணவ- மாணவியரின் சேர்க்கை அதிகரிக்கவும், பெற்றோர்கள் மத்தியில் தங்களது குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டு மென்ற விழிப்புணர்வும் ஏற்படுமெனவும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story