வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தந்தை மற்றும் மகனை கைது செய்ய மறுக்கும் காவல்துறையினரை கண்டித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தந்தை மற்றும் மகனை கைது செய்ய மறுக்கும் காவல்துறையினரை கண்டித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட
X
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தந்தை மற்றும் மகனை கைது செய்ய மறுக்கும் காவல்துறையினரை கண்டித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தந்தை மற்றும் மகனை கைது செய்ய மறுக்கும் காவல்துறையினரை கண்டித்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் காளிராஜ். ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி தெருவை சேர்ந்த தந்தை பாலகிருஷ்ணன் அவரது மகன் சுகுமார் இவர்கள் மாத பணம் சீட்டு நடத்தி வட்டி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களிடம் சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது மாத பணம் கட்டும் சீட்டில் சேர்ந்ததாகவும் இந்நிலையில் பாலகிருஷ்ணன் அவரது மகன் சுகுமார் சாகுல் ஹமீதுக்கு 20 லட்சம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் பணத்தை இருவரும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாகுல் ஹமீதின் நண்பர்கள் ஆன காளிராஜ் முனியசாமி ஐயப்பன் புஷ்பநாதன் ஆகிய நான்கு பேரும் பாலகிருஷ்ணன், சுகுமார் வீட்டிற்கு சென்று சாகுல் ஹமீதுக்கு ஆதரவாக பேசி பணத்தை வாங்கி தர சென்றுள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் காளிராஜ் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி என் வீட்டிற்கு வர உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கூறியதாகவும் சுகுமார் காளிராஜை நெஞ்சில் மிதித்து கீழே தள்ளி மிகவும் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் சுகுமார் இவர்களிடமிருந்து காளிராஜை மீட்ட நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய காளிராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி பாலகிருஷ்ணன் சுகுமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் நீண்ட நாள்கள் தாமதத்திற்கு பிறகு வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை தற்போது வரை கைது செய்யப்படவில்லை இது சம்பந்தமாக கடந்த ஒன்னரை வருடங்களாக காவல்துறையினர் பாலகிருஷ்ணன் சுகுமாருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் காளிராஜ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான வழக்கை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணனும் சுகுமாறும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பாலகிருஷ்ணன் சுகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உத்தரவும் உயர்நீதிமன்றம் பிறப்பித்த போதும் இருவரையும் கைது செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வருவதால் காளிராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இது சம்பந்தமாக காவல் துணை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்திக்க வரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறையினர் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முயற்ச்சி செய்வதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தந்தை மகனை நாளைக்குள் கைது செய்து சிறையில் அடைப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த பின்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஸ்டாலின் ஆட்சியில் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் ஏவல் துறையை கண்டித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிருப்தியையும் முகசுழிப்பையும் ஏற்படுத்தியது. பேட்டி : முத்துக்குமார் ( வழக்கறிஞர் ) பேட்டி : காளிராஜ் ( பாதிக்கபட்டவர் )
Next Story