ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் வழிபாடு செய்ய சென்ற போது இரு பிரிவினர் கிடையே தகராறு.,காவல் சார்பு ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் க

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான்  கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் வழிபாடு செய்ய  சென்ற போது இரு பிரிவினர் கிடையே  தகராறு.,காவல் சார்பு ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் க
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் வழிபாடு செய்ய சென்ற போது இரு பிரிவினர் கிடையே தகராறு.,காவல் சார்பு ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் காயம் 35 பேர் கைது....*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம் தவித்தான் கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவிலில் வழிபாடு செய்ய சென்ற போது இரு பிரிவினர் கிடையே தகராறு.,காவல் சார்பு ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் காயம் 35 பேர் கைது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவித்தான் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த வாரம் பொங்கல் திருவிழா நடைபெற்றது.இதில் நேற்று நள்ளிரவில் எட்டாம் நாள் பூஜைக்கு சாமி தரிசனம் செய்ய மற்றொரு பிரிவினர் தெரு வழியாக வரும்போது இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் கருப்பசாமி மீது கற்களை வீசியதால் மூக்கில் காயம் ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் அதே பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்பவருக்கும் காயப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 35 பேரை பிடித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் பத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story