காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்!

X

கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் 25-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களை ஏந்தியபடி, போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் ஊராட்சி, தேன்கனி மலை, ஜட குட்டை ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் 25-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களை ஏந்தியபடி, போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் குடிநீர் கிடைக்க ஒருவாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story