விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி புகைப்படம் எடுப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

X

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி புகைப்படம் எடுப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி புகைப்படம் எடுப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத்தமிட்டி புகைப்படம் எடுப்பது தொடர்பான பணிகள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னை சிவகாமிபுரம், பர்மா காலனி, பாண்டியன் நகர், தாதம்பட்டி,ஒ.கோவில்பட்டி, சங்கரலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி பொருப்பாளர் ஜான் மகேந்திரன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவை தலைவர் விஜயகுமரன், உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story