நெமிலி அருகே வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

நெமிலி அருகே வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
X
வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
நெமிலி அருகே கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சேது பதி (24). இவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீ சார் வழிப்பறி குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சந்திரகலாவுக்கு, எஸ் பி விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். இதனையடுத்து, சேதுபதியை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
Next Story