மருத்துவமனை கட்டுமான பணியை ஆய்வு செய்த செய்யூர் எம்எல்ஏ

X
செய்யூர் அரசு பொது மருத் துவமனைக்கு ரூ.3.20 கோடி மதிப்பில் ஒருங்கி ணைந்த மருத்துவமனை கட்டிட கட்டுமான பணியினை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆய்வு. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதி மையப்பகுதியில் செய்யூர் அரசு பொது மருத்துவ மனை உள்ளது.இந்த அரசு மருத்துவம னைக்கு ரூ.3.20 கோடி சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை கட்டுமான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது இந்த பணியினை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆய்வு மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார் மேலும் விரைவாக கட்டி முடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார் பொதுமக்களிடமும் குறைகளை கேட்டு அறிந்தார் இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் பாபு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story

