தகராறில் வாலிபர் மண்டை உடைப்பு- போலீஸ் விசாரணை!

தகராறில் வாலிபர் மண்டை உடைப்பு- போலீஸ் விசாரணை!
X
பீர் பாட்டிலால் வாலிபரின் மண்டையை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலப்பாடியை சேர்ந்த அருண்குமார் நண்பர்களுடன் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் பாரில் மது அருந்தினார். அதே பாரில் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ராஜா தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது அருண்குமாருக்கும், ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .தகராறில் ராஜா பீர்பாட்டிலால் அருண்குமாரை தாக்கினார். இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் தெற்கு காவல் நிலைய போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
Next Story