சோழவந்தானில் பூக்குழி திருவிழா.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இவ்விழாவை முன்னிட்டு நேற்று (ஜூன் .11) மாலை அர்ச்சகர் சண்முகவேல் மேளதாளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அக்னிகரகம் ஜோடித்து அங்கிருந்து பூஜைகள் புறப்பட்டு வடக்குரதவீதி, மார்க்கெட் ரோடு வழியாக மந்தைக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தனர். முன்னதாக ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் கோவிந்தம்மாள் தெரு வழியாக பூக்குழி இறங்கும் இடத்திற்கு வந்தது. பின்னர் அர்ச்சகர் சண்முகவேல் கரகத்தை சுமந்து பூக்குழி இறங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டியுடன் குழந்தைகளுடனும் அழகு குத்தியும் பூக்குழி இறங்கினார்கள். நிறைவாக மணிகண்டன் என்பவர் 21 அக்னி சட்டி எடுத்து பூக்குழி இறங்கினார். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும், தீயணைப்பு வீரர்களும் இருந்தனர்.
Next Story




