கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்
பள்ளி மாணவர்களின் நலனில் தனித்த அக்கறை கொண்டு குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிற வகையில் பல்வேறு திட்டப் பணிகளைத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், பல்வேறு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியின் மூலமாகவும் செயல்படுத்திவரும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 52, அவ்வை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி ரூ.124 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தைத் இன்று (ஜூன்.12) திறந்து வைத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் கலந்துரையாடினார். உடன் மேயர் இந்திராணி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




