போக்குவரத்து அலுவலகத்தில் நகராட்சி தலைவர் மனு

X
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த 31ஆம் தேதி குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது எழுந்த கோரிக்கையின் பேரில் பொதுமக்களின் வசதிக்காக நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாரத்தாடம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் படி இரண்டு நாட்கள் மட்டுமே பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்கள் பின்னர் வரவில்லை. எனவே அனைத்து பஸ்களும் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழித்துறை நகராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி மற்றும் கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள அரசு போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.
Next Story

