தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு முறை அறிமுகம்

X
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், கல்வி மற்றும் ஆராய்ச்சியை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளின் சாராம்சத்தை, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எளிய, உரையாடல் வடிவிலான பாட்காஸ்ட்களாக மாற்றியுள்ளது. இந்த புதிய முயற்சி கல்வியாளர்கள், மாணவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆராய்ச்சிகளின் பலன்களை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. பேராசிரியர்களின், ஆய்வுக் கட்டுரைகளின் முக்கிய பகுதிகள், செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பாட்காஸ்ட் ஆடியோக்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பாட்காஸ்ட்கள், ஆய்வுத் தகவல்களை எளிய உரையாடல் நடையில் விளக்குவதால், துறை சார்ந்த வல்லுநர்கள் அல்லாதவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் விருப்பமான மொழியில் இந்த பாட்காஸ்ட்களைப் பதிவிறக்கம் செய்து கேட்டு பயன்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
Next Story

