புதுக்கடை: பெண் தூக்கிட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் ஹெலன்நகர் கடற்கரை கிராம பகுதியை சேர்ந்தவர் சஜின் மனைவி சினி (29). இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது இனயம் திருப்பு என்ற பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சினியின் கணவர் வழக்கு சம்பந்தமாக கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இதனால் மனைவி சினி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வாடகை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சினி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

