சீத்தப்பட்டி காலனி-டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு.
சீத்தப்பட்டி காலனி-டூவீலரில் சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு. மதுரை மாவட்டம் மேலூர் அருகே கடம்பூர் முத்துப்பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணா பாண்டியன் வயது 50. இவர் ஜூன் 10ஆம் தேதி இரவு 10:20 மணி அளவில் மதுரை கரூர் பைபாஸ் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீத்தப்பட்டி காலனி அருகே வரும்போது அதே சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கிருஷ்ண பாண்டியன் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த வரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ண பாண்டியனின் மனைவி பிரியா வயது 36 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக, மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அதன் ஓட்டுனர் யார் ? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story




