அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக விழா

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டலாபிஷேக விழா
X
குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்து மண்டலாபிஷேக விழா நடந்து வருகிறது.
குமாரபாளையம் காந்தி நகர் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன். 1ல், கிராமசாந்தியுடன் தொடங்கியது. கணபதி யாகம் மற்றும் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அம்மன் சர்வ அலங்காரத்துடன் ஊர்வலமாக, அருள்பாலித்தவாறு வந்தார். நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு, ஜூன், 6ல், காலை 06:00 மணியளவில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை அங்கப்ப சுவாமி, கும்பகோணம் சேஷாத்திரி பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் மருதாசல அடிகளார், கோவை, சின்ன வேடம்பட்டி குமரகுருபர சுவாமிகள், சின்னவேட்டுவம்பாளையம், சென்னிமலை படிக்கட்டில் மாட்டு வண்டி ஓட்டி சாதனை புரிந்த, வேளாளத்தம்பிரான் சுவாமிகள், உள்பட பலர் பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவையடுத்து, மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story