காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து வெகு விமரிசையாக நடைபெறும் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா*

காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து வெகு விமரிசையாக நடைபெறும் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா*
X
காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து வெகு விமரிசையாக நடைபெறும் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா*
காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து வெகு விமரிசையாக நடைபெறும் முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே உள்ள காரியாபட்டி பகுதிகளிலேயே முதலாவதாக உருவாகிய சுமார் 162- ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த கோயிலில் பலதரப்பட்ட மக்கள் சாமி கும்பிடுவது வழக்கம் ஆனால் பல ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு இக்கோயிலில் முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காரியாபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை எத்தனை நபர்கள் மாறினாலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு இந்த ஊர் மக்கள் சார்பாக முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. அதனால் காவலர்கள் சார்பில் ஆண்டு தோறும் இக்கோயிலுக்கு சிறப்பு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் திருவிழாவிற்கு காரியாபட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆண், பெண் காவலர்கள் சமூக நல்லிணக்கத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் 1000 முதல் 2000 ரூபாய் வரை தலக் கட்டு வரி செலுத்தி கோயிலில் தங்களது குடும்பத்துடன் பொங்கல் வைத்து இரட்டை கெடா வெட்டி பொங்கல் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். இரவு முழுவதும் விடிய விடிய அம்மன் வீதிஉலா நடைபெற்ற நிலையில் இன்று கிராம கோயில் நிர்வாகத்தின் சார்பில் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன், இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து முதல் மரியாதை செய்யப்பட்டது. மேலும் எங்கும் இல்லாமல் காரியாபட்டி காவல்துறை சார்பில் வள்ளி திருமணம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஆண்டாண்டு காலமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் முத்தாலம்மன் சிலைக்கு கண் திறந்து வைக்கும் நிகழ்ச்சியின் போது முத்தாலம்மன்னுக்கு காரியாபட்டி கிராம மக்கள் சார்பில் தங்கம், வெள்ளி நகைகள் அணிவது வழக்கம், அதையும் காவல்துறையினர் முன்னிலையில் தான் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக முத்தாலம்மன் மயில் வாகனத்தில், புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காரியாபட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. அப்போது முத்தாலம்மனை பொதுமக்கள் தேங்காய் உடைத்து மாலை அணிவித்து வரவேற்றனர். கோயில் திருவிழாவிற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தங்கள் பணி நிறைவடைந்தது என இல்லாமல் தலக்கட்டு வரி செலுத்தி முன்னின்று கோயில் திருவிழாவை நடத்தும் காவலர்களின் செயல்பாடு இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story