மதுவிலக்கு அமலாக்க துறையினர் திடீர் அதிரடி சோதனை

பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோர்ஸ், கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால், விற்கப்படுகிறதா என்று மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோர்ஸ், கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால், விற்கப்படுகிறதா என்று மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 12.06.2025ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் அவர்களின் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பெரம்பலூர் பகுதியில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஷாப், கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால் போன்றவை சட்டம் விரோதமாக விற்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். கூரியர் சர்வீஸ் அலுவலகத்தில் போதை பொருட்கள் போன்ற தவறான முகவரியில் வருகிறதா என்றும் ஆய்வு செய்தனர்கள்.
Next Story