மின் விளக்குகள் அமைக்க உதவிய மாவட்ட கலெக்டருக்கு நன்றி

மின்  விளக்குகள் அமைக்க உதவிய மாவட்ட கலெக்டருக்கு  நன்றி
X
குமாரபாளையம் அருகே அம்மா பூங்காவில் மின் விளக்குகள் அமைக்க உதவிய மாவட்ட கலெக்டருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சி, கத்தேரி பிரிவில் உள்ள அம்மா பூங்காவில் மின் விளக்குகள் இல்லாததால், பூங்காவிற்கு செல்லும் பொதுமக்களும், குழந்தைகளும் மிகவும் அச்சத்தோடு இருந்தனர். பாம்புகள், விஷ ஜந்துகள், பூச்சிகள் இருப்பதும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் பொது மக்களின் நலன் கருதி பூங்காவில் ஆய்வு செய்து மின் விளக்குகளை அமைக்க உதவி செய்திடக்கோரி, மாவட்ட கலெக்டர் உமாவிடம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, பூங்காவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அனைவருக்கும் பொதுமக்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Next Story