சிங்காரப்பேட்டை:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடி போது அங்கு வந்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரவீன் (20) என்பவர் சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி சென்றாள். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவீனை கைது செய்தனர்.
Next Story

