பத்தமடை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி

பத்தமடை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி
X
பைக்கிலிருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி
தென்காசி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள புலவன்குடியிருப்பு கிராமம் காலனி தெருவை சோ்ந்தவா் மு.ராஜசேகா்(41). எலக்ட்ரீசியன். இவா், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் பொத்தை அருகில் வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பத்தமடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜசேகா் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story