கோவை: மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பாடநூல் வெளியீடு

கோவை: மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பாடநூல் வெளியீடு
X
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உயிர் குட்டி காவலர் திட்டத்தின் கீழ், மாணவர் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வெளியிடப்பட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உயிர் சாலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உயிர் குட்டி காவலர் திட்டத்தின் கீழ், மாணவர் பயிற்சி புத்தகம் மற்றும் ஆசிரியர் கையேடு வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு மாணவ, மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பள்ளி பருவத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். சாலை விதிகளை பின்பற்றுவது, ஓட்டுநர்களுக்கே அல்லாது நடைபயணிகளுக்கும் தேவையெனவும், நம்மூரிலும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த பழக வேண்டும் எனவும் கூறினார். நிகழ்ச்சி இறுதியில், குஜராத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story