கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா் கைது

X
திண்டுக்கல் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் போலீஸாா், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மேற்குவங்க மாநிலம், புருலியாவிலிருந்து வந்த ரயிலில் பயணித்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திவாகா் கத்தாா்யா(33) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸாா் சோதனை செய்ததில் அவா் 10 கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் திவாகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Next Story

