சேலத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி

X
சேலம் மாவட்ட அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு மாநில தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் அரசு டாக்டர்கள் சிலர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- அரசு டாக்டர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு டாக்டர்கள் அவமதிப்பு செய்யப்படுகின்றனர். அரசு ஊழியர்களுக்கான அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த டாக்டர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான டாக்டர்கள், நர்சுகள் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பாதயாத்திரை வருகிற 21-ந்தேதி சென்னையில் முடிவடைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

