தசாவதாரம் நடத்திய கூடலழகர் பெருமாள்

மதுரை ராமராயர் மண்டபடியில் நேற்று தசாவதார நிகழ்வு நடைபெற்றது
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி உற்சவ திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.இத் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வு கடந்த ஜூன் 10ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குதிரை வாகனத்தில் புறப்பட்ட கூடலழகர் வைகை கரையோரம் உள்ள ராம ராயர் மண்டபடியில் தசாவதார நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கூடலழகரை தரிசனம் செய்தனர். இன்று அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர்கிறார்.
Next Story