மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதி உதவி.

மதுரையில் மறைந்த காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு காவல் துறையில் 1999 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேர்ந்த காவலர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதே வருடம் காவலராக பணியில் சேர்ந்த மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவர் சிறப்பு சார்பு ஆய்வாளராக மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ள முருகன், கடந்த 15.04.2025 அன்று இறந்துவிட்டார். இதனையறிந்த 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்களில், சுமார் 2709 நபர்கள் ஒன்றினைந்து நிதி பங்களிப்பு செய்து, சுமார் Rs. 13,59,000/-(பதிமூன்று இலட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரம் மட்டும்) ரூபாயை மேற்படி இறந்த நபரான சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் அவர்களின் மனைவி மற்றும் மகளிடம், நேற்று 12.06.2025 ஆம் தேதி, மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த், அவர்கள் மூலம் ஒப்படைத்தனர். மேற்படி 1999 ஆம் ஆண்டு காவலர்களின் இந்த செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
Next Story