பாம்பு கடித்து கூலி தொழிலாளி பலி.

பாம்பு கடித்து கூலி தொழிலாளி பலி.
X
மதுரை அருகே தன்னை கடித்த பாம்பினை கொன்று பின் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் அண்ணா தெருவை சேர்ந்த ராஜேந்திரன் ( 57) என்ற விவசாய கூலித்தொழிலாளி தேனூர் ஊத்துக்கால்வாய் வாழ தோப்பு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது அவரது காலில் விஷ பாம்பு கடித்து விட்டது எனினும் அவர் கடித்த பாம்பு விரட்டி சென்று அடித்துக் கொண்டுள்ளார் பின்னர் இது பற்றி தன்னுடன் வேலை பார்த்த மற்றொரு கூலி தொழிலாளி மூலம் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தார் அவரது மனைவி வந்து பார்த்தபோது ராஜேந்திரன் இறந்த பாம்பு அருகே உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story