கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
X
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
கலவையை அடுத்த மேச்சேரி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சுந்தர் (வயது 38). இவர் நேற்று முன்தினம் கிணற்றின் ஓரம் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீசார் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சுந்தர் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story