திருவாரூரில் சாலை பணியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

X
கண்ணில் கருப்பு துணி கட்டி... கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.." தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை திருவாரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணில் கருப்பு துணியும் கையில் கருப்பு கொடியை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்... "சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.. மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்..." உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் பொன்முடி கோரிக்க விளக்க உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செங்குட்டுவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

